திடீர் திருப்பம்...200 சவரன் நகை கொள்ளை...ரஜினி மகள் மீண்டும் புகார்.!

நடிகர் ரஜினிகாந்த் மகளும்,  இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  வீட்டில் லாக்கரில் வைத்து இருந்த நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள நகை கற்கள் திருடு போன சம்பவம்

நடிகர் ரஜினிகாந்த் மகளும்,  இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  வீட்டில் லாக்கரில் வைத்து இருந்த நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள நகை கற்கள் திருடு போன சம்பவம் தொடர்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை  விசாரணை நடத்தி வந்தனர.

இந்த விசாரணையில்,  ஐஸ்வர்யா வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்த ஈஸ்வரி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஈஸ்வரிக்கு உதவியாக இருந்த வெங்கடேசன் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்து விசாரணை நடத்தியதில் ஈஸ்வரியிடம் இருந்து முதலில் 100 சவரனும் அதன்பிறகு 43 சவரனும் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், ஏற்கெனவே 143 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது ஐஸ்வர்யா  புதிய புகாரை அளித்துள்ளார். புகாரில் வெள்ளி பொருட்கள் இவ்வளவு காணவில்லை என்றும், அதைப்போல 200 சவரன் நகை காணவில்லை எனவும்” புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இதுகுறித்து ஈஸ்வரியிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  போலீசார் கொள்ளை போன நகைகள் எவ்வளவு என ஆய்வு செய்து தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டநிலையில் ஐஸ்வர்யா மீண்டும் புதிய புகார் அளித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.