காதலிச்சு என்னை ஏமாத்திட்டாரு! சன்னி லியோன் வேதனை!

Sunny Leone : ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டேன் என நடிகை சன்னி லியோன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானலும் கூட அடுத்ததாக அதில் நடிப்பதை நிறுத்திவிட்டு அடுத்ததாக சினிமா படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழ் சினிமாவில் கூட சமீபகாலமாக அதிக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில், கடைசியாக தமிழில் கூட ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தி, தமிழ் என மொழிகளில் படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சன்னி லியோன் திருமணம்னு சொல்லி ஏமாத்திட்டாங்க என பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை சன்னி லியோன் “கடந்த சில வருடங்களுக்கு முன்ப நான் ஒரு மனிதனை மிகவும் நேசித்தேன். எனக்கு அவரை ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது. என்னையும் அவருக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. நானும் அவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம். அதன் பிறகு ஏதோ தவறு இருப்பதாகவும், அவர் என்னை ஏமாற்றுவதாகவும் உணர்ந்தேன்.
அது ஒரு புறம் இருக்க ஹவாய் தீவுகளில் பிரம்மாண்டமான மற்றும் வாழ்நாள் முழுவதும் திருமணத்தை நடத்த திட்டமிட்டோம். இதற்கு எல்லாம் முன்பதிவு செய்து பணம் கொடுத்து விட்டேன். அதன் பிறகு ஒரு நேரத்தில் அவர் என்னை வேண்டாம் என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார். பழகிவிட்டு அவர் அப்படி சொன்னதும் என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. என்னுடைய இதயமே நொறுங்கிவிட்டது.
எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அதன் பிறகு நான் முழுவதும் கடவுளை மட்டும் தான் நம்பினேன். அதன் பிறகு என்னுடைய வாழ்வில் பல மாற்றங்களை கடவுள் தான் கொண்டு வந்தார். டேனியல் வெபரை அறிமுகப்படுத்தினார். அவரை தான் திருமணம் செய்துகொண்டேன் என்னுடைய வாழ்கை மாறிவிட்டது” என சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025