தேர்தல் முடிந்த பிறகே தளபதி 65 படப்பிடிப்பு... வெளியான சூப்பர் தகவல்..!

It has been reported that the crew plans to start shooting for thalapathy 65 at the end of April after the election.

தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு தேர்தல் முடித்த பிறகு  ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .

மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்கள்.மேலும் ஹீரோயினாக நடிக்க வைக்க பூஜா ஹெக்டேயிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தளபதி 65 படத்தினை குறித்து தற்போது வெளியான தகவலின்படி, தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு தேர்தல் முடித்த பிறகு  ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் முடிந்த பிறகே தளபதி 65 படப்பிடிப்பு... வெளியான சூப்பர் தகவல்..!