பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ரஜினியுடன் முதல் படத்தில் இணையும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
unknown nodeசமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் முறுக்கு மீசையில் ரஜினி இருப்பது போன்ற படத்தையும் படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரும் பெருத்த வரவேற்பைப் பெற்றது.பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.