ஜெயிலர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 170-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் தனது 171-வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே, வெளியான தகவலை போல லோகேஷ் கனகராஜ் தான் ரஜினியின் 171-வது படத்தை இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்தின் சண்டை இயக்குனர்களாக அன்பறிவு பணியாற்றுகிறார்கள் எனவும் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேற்று முழுவதும் லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படத்திற்கான கதை சரியில்லை என்ற காரணத்தால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தலைவர் 171 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதைபோல ரஜினிகாந்த் தற்போது தனது 170-வது படத்தில் நடிக்கவுள்ளார். இருவரும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தலைவர் 171 படத்தில் இணைவார்கள் என கூறப்படுகிறது.
