கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Tamil movie superstar Rajinikanth is getting his corona vaccine today.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனக்கான கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மேலும், கொரோனாவின் இரண்டாம் அலையில் பல்வேறு அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள் என முக்கியமான பல பிரமுகர்கள் மறைந்துவிட்டனர். எனவே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருக்க வேண்டும் என அடிக்கடி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

ஆனால் அண்மையில், தமிழ் திரையுலகின் காமெடி நடிகர் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் தடுப்பூசி குறித்த வதந்தி தீயாக பரவி வந்த நிலையில், சிலர் இவற்றை நம்பினாலும் பலர் இவற்றை பொய்யென மெய்ப்பிக்கும் வகையில் தங்களுக்கான தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனக்கான தடுப்பூசியை இன்று  போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node