தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள திரைப்படங்களில் ஒன்று மாமனிதன். சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்திரி நடித்துள்ளனர். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.
unknown nodeகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவிருந்தது. சில காரணங்களால் வெளியாகம் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதன் பின் இறுதியாக இந்த படம் வரும் மே மாதம் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
unknown nodeஇந்த நிலையில், இந்த படத்தை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் பார்த்து விட்டு நெகிழ்ந்து பாராட்டியுள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇதுகுறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “ஜனவரியில் மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள் நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்பனையாவும் முடிந்தது சார் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
ஜனவரியில்#மாமனிதன் படம் பார்த்து
பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லைஅது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள்
நீங்கள் படம் பார்த்ததே
ஆசிகள் அதுபோதும் என்றேன்.இன்று வெளியீட்டு தேதி
தானாகவே விற்பனையாவும்
முடிந்தது சார்.
நன்றி @rajinikanth ???? pic.twitter.com/CbOTISyXTI— R.Seenu Ramasamy (@seenuramasamy) March 26, 2022