இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் “சாணி காயிதம்”. பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த படம் கடந்த மே 6-ஆம் தேதி வெளியான படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளபக்கங்களில் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeஅந்த வகையில், நடிகர் சூரி படத்தை பார்த்துவிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார். இது குறித்து ட்விட்டரில், ” சாணிக்காயிதம் படம் பார்த்தேன். கீர்த்தியின் நடிப்பு பார்த்து மிரண்டு விட்டேன். பல விருதுகள் உங்களுக்காக காத்திருக்கிறது தங்கச்சி. கீர்த்தி சுரேஷ் அசாத்திய உழைப்பு தந்துள்ள சார், செல்வராகவன் சார் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
unknown node