வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்திற்கு விடுதலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகர் சூரி தற்பொழுது இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கதாநாயகனாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் முற்றிலும் ஒரு கவிதையின் நாவலை வைத்து கதை இருப்பதாக கூறப்படுகிறது.இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படதிற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. விடுதலை என தலைப்பு வைத்திருக்கும் இந்த போஸ்டரில் நடிகர் சூரி கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார். போஸ்டரில் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node