நடிகை சமந்தா கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி 36 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை சமந்தா தனது வரவிருக்கும் வெப்தொடரான ‘சிட்டாடலின்’ செட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியதாக தெரிகிறது.
unknown nodeஇது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களையும் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில் ” சமந்தாவிற்கு தெரியாமலே பார்ட்டி ஒன்றை படக்குழு ஏற்படுத்தியுள்ளது. பலூன்கள் நிறைந்த அறைக்குள் சமந்தா நுழைகிறார். பலூன்களைப் பார்த்த சமந்தா அறைக்குள் நுழைய மறுத்து சிரிக்க ஆரம்பித்தார்.
unknown nodeபிறகு அவரை இழுத்து அறைக்குள் வரவழைத்தனர்.அவர் உள்ளே வந்தவுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கியது. சமந்தா வெட்கப்பட்டு சிரித்தார். பிறகு கேக்கை வெட்டி சமந்தா சிட்டாடலின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதில் ஒரு படத்தில் வருண் தவானும் இடம் பெற்றிருந்தார்.
unknown nodeKushi movie [Image source : Twitter / @filmcinematalky]
அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும். நடிகை சமந்தா தற்போது நடித்து முடித்துள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
