காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது சூரரை போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி வருகிறார். இப்படம் கோயம்புத்தூரை சேர்ந்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
unknown nodeஅபர்ணா பாலமுரளி இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது.
இப்படத்தில் பணியாற்றிய 150 பணியாளர்களுக்கு தலா ஒரு பவுன் தங்க நாணயத்தை நடிகர் சூர்யா பரிசாக அளித்துள்ளார். இது படக்குழுவினருக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதற்கு முன்னர் பிகில் ஷூட்டிங் நிறைவு பெற்றதும் தளபதி விஜய் படக்குழுவினருக்கு மோதிரத்தை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.