சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் அபினவ் முகுந்திற்கு இந்திய அணியில் இடம் இல்லையா என்று நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி கொந்தளித்துள்ளார்.அபினவ் முகுந்த் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.இவர் இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 320 ரன்களை அடித்துள்ளார்.மேலும் 2 அரை சதங்கள் அடித்துள்ளார்.அபினவ் கடைசியாக 2017-ஆம் ஆண்டு இலங்கைக்கு அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
unknown nodeஇந்த வருடம் நடைபெற்ற விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழக அணிக்காக 12 ஆட்டங்களில் விளையாடி 600 ரன்கள் அடித்துள்ளார் .அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் இவருக்குத்தான் . கடந்த ஆண்டு விஜய் ஹசாரே போட்டியில் 9 போட்டிகளில் விளையாடி 560 ரன்கள் எடுத்தார் .
unknown node