ஜெய் பீம் இயக்குனருடன் சூப்பர் ஸ்டார்.! "தலைவர் 170" படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான 'தலைவர் 170' படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ‘தலைவர் 170’ படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் படத்தில்’ நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்திலும் நடிக்க காத்திருக்கிறார்.

unknown node

rajinikanth jailer [Image Source : Google ]

இந்நிலையில், இன்று லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரன் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர்170” திரைப்படத்தின் அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை ஒரு அறிக்கையுடன் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற ரஜினிகாந்தின் “தலைவர்170” திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம் என்று தெரிவித்துள்ளது.

unknown node

அதாவது, மாபெரும் வெற்றி பெற்ற ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் “தலைவர் 170” திரைப்படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், ரஜினியின் தர்பார் மற்றும் காலா ஆகிய இரண்டு படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node