தளபதி 65 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

It has been reported that the shooting of a acotor thalapathy Vijay's 65th film will start in March next year

தளபதி விஜயின் 65 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார் . அந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.

அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையைமைப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த நிலையில் அந்த அறிவிப்பை தொடர்ந்து தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது ஆம், விஜயின் 65 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.