தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் எப்போம் தெரியுமா...?

It has been reported that Jean will be released on the 22nd on the eve of the title of the film thalapathy 65 and First Look Vijay's birthday.

தளபதி 65 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜீன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடித்து விட்டு அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பாகவே வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். அதைபோல் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்த தளபதி 65 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜீன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.