நடிகர் விஜயும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து தனது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
unknown nodeஏற்கனவே மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜயின் ரசிகர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. அத்துடன் மக்கள் இயக்கத்திற்கு என்று பிரத்யேக கொடியையும் விஜய் அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை, மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைக்க இணையதளம் ஒன்றை விஜய் துவக்கியுள்ளார். www.vijaymakkaliyyakam.in என்ற பெயரிலான இணையதளத்திற்கு சென்று ரசிகர்கள் தங்களை விஜயின் மக்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளலாம். மேலும் விமி (vmi) என்ற செல்போன் ஆப்பையும் விஜய் அறிமுகம் செய்துள்ளார்.
unknown nodeஇந்த ஆப்பை டவுன்லோட் செய்தும் தங்கள் விவரங்களை கொடுத்து விஜயின் மக்கள் இயக்கத்தில் இணையலாம். அரசியல் கட்சி துவங்க உள்ள ரஜினி மற்றும் கமல் ஆன்லைன் மூலம் தங்கள் ரசிகர்களை ஒன்றிணைத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயும் தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.