தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: இன்று முழுவதும் இலவச பேருந்து சேவை.!

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று முழுவதும் இலவச பேருந்து

vijay makkal iyakkam

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று முழுவதும் இலவச பேருந்து இயக்கப்படுகிறது.

நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் விஜய் தனது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரின் சிறப்பு தினத்தை கொண்டாடும் வகையில், பல நலத்திட்டங்கள் மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

unknown node

HBDThalapathyVIJAY – free bus [Image Source : Twitter/@Actor Vijay Fans]

அந்த வகையில்,  பல்வேறு இடங்களில் உள்ள மக்களுக்கு ரத்தம், உணவு மற்றும் பிற நலப் பொருட்களை தானம் ஒரு பக்கம் செய்ய, புது முயற்சியாக விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் கேரளாவின் கொயிலாண்டி ஆகிய இடங்களில் இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து சேவையை ஏற்பாடு செய்துள்ளனர்.

unknown node

HBDThalapathyVIJAY – free bus [Image Source : Twitter/@Actor Vijay Fans]

மேலும், பல இடங்களில் விஜய்க்கு நாளைய முதல்வர் என்று போஸ்டர் அடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் எல்லா சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

unknown node

HBDThalapathyVIJAY – free bus [Image Source : Twitter/@Actor Vijay Fans]

இதற்கிடையில், லியோ படத்தின் முதல் சிங்கிள், ‘நா ரெடி, இன்று மாலை வெளியிடப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையில் விஜய் பாடிய பாடல் இணையத்தை கலக்க இருக்கிறது. மேலும் படம் தசரா விழாவிற்காக அக்டோபர் 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

unknown node

LeoFirstSingle [Image Source : @7screenstudio]