தளபதி 65 படத்தின் தாறுமாறான லேட்டஸ்ட் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Pooja for thalapathy 65 will start on the 15th and shooting for the film will start in the first week of April.

தளபதி 65 படத்திற்கான பூஜை வருகின்ற 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாகவும், படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்.

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது ஆம், இந்த படத்திற்கான பூஜை வருகின்ற 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாகவும், படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில்  ரஷ்யாவில் தொடங்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.