வாரிசு படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தளபதி 67 என்று தற்காலிகமா தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
unknown nodeThalapathy67 [Image Source : Twitter]
படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeThalapathy67 TITLE is loading [Image Source: Twitter ]
இதனையடுத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் தொடர்ந்து அப்டேட்கள் கொடுத்து தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது. அந்த வகையில், இன்று தளபதி 67 படத்தின் தலைப்பு என்ன என்பதை மாலை 5 மணிக்கு வெளியிடஉள்ளது.
unknown nodeஇதற்கிடையில். தற்போது படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே, படப்பிடிப்பிறகாக காஷ்மீர் படக்குழு விமானத்தில் ஜாலியாக சென்ற வீடியோவை 7 ஸ்க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீடியோவில் விஜய் விமானத்தில் ஏறி அனைவரையும் பார்த்து கை அசைத்து செல்கிறார். மேலும் வீடியோவில் படக்குழுவுடன் விக்ரம் படத்தில் நடித்த ஏஜென்ட் டினாவும் செல்கிறார். எனவே அவரும் படத்தில் நடிக்கிறார் என தெரிகிறது.