Thalapathy67Update: நடிகராக 'தளபதி 67' படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 67 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என தலைப்பு

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 67 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

unknown node

thalapathy 67 update [Image Source : Twitter]

தரமான கேங்ஸ்டர் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அடுத்த சில மணி நேரங்களுக்கு தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ள முக்கிய பிரபலங்கள் குறித்த அறிவிப்பை வெளியீட்டு வருகிறது.

unknown node

Thalapathy67 Priya Anand [Image Source : Twitter]

அந்த வகையில், ஏற்கனவே படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடன இயக்குனர் சாண்டி படத்தில் நடிகராக நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

படத்தில் இணைந்ததற்காக மகிழ்ச்சியுடன் பேசிய சாண்டி “எங்கள் அன்பான லோகேஷ் கனகராஜ் இயக்கிய மிகவும் மதிப்புமிக்க திட்டமான #தளபதி67 இல் நடிகராக என்னைப் பார்ப்பது ஒரு சிறப்பு உணர்வு மற்றும் மிகவும் புதியது. ஒரே ஒரு தளபதி விஜய் சாருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் நான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது” என கூறியதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.