பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரமின் அசுர நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர், மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தற்போது, இந்த திரைப்படத்தை ஆஸ்கர், கேன்ஸ் உள்ளிட்ட 8 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், படத்திற்காக எந்த அளவிற்கு படக்குழு கடினமாக உழைத்துள்ளார்கள் என்பது இந்த மேக்கிங் வீடியோவில் தெரிகிறது. எனவே, படம் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் பேசப்படும் என தெரிகிறது.
கோலார் தங்க வயல் பின்னணியை கதைக்களமாக கொண்டு, பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இப்படம், 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும். படத்தை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும், அவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
