ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் நடிகைக்கு இவ்வளவு கோடியா சம்பளம்

this news gices information about The actress who plays the role of Jayalalithaa is so much paid by the movie-jayalalitha

நடிகை கங்கனா ரணாவத் இந்தியில் குயின் படத்தில் தேசிய விருது பெற்றார்.இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் என தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர்  விஜய் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வருகிறார்.இவரது இயக்கத்தில் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் .இந்நிலையில்      மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்  வாழ்க்கையை படமாக பலர் போட்டி போட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இயக்குனர் விஜய் “தலைவி” என்ற தலைப்பில்  ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து இருந்தார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார் .

நடிகை கங்கனா ரணாவத் இந்தியில் குயின் படத்தில் தேசிய விருது பெற்றார்.இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம்  என தகவல் வெளியாகி உள்ளது.

எந்த நடிகையும் இவ்வளவு அதிகமான சம்பளம் வாங்கியது இல்லை. கங்கனா ரணாவத்  “பங்கா” இந்தி படத்தில் நடிக்கிறார்.

ஜெயலலிதா வாழ்க்கையை பிரியதர்ஷினி “த ஐயன் லேடி” என்ற பெயரில் உருவாக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .