"சூப்பர் டீலக்ஸ்" படத்திற்கு தணிக்கை குழு "ஏ" சான்றிதழ் கொடுத்துள்ளது

this news gives information about The Audit Committee has certified "A" for "Super Deluxe"-"Super Deluxe" padaththirkku thanikai

“சூப்பர் டீலக்ஸ்” படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பி வைத்தது.படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழு உறுப்பினர்கள்  “யூ”மற்றும் “யூஏ” சான்றிதழ் பதிலாக “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர்  வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் “சூப்பர் டீலக்ஸ்” படத்தின்  டிரைலர் வெளியானது. டிரைலருக்கு  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தில்  இதில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இப்படத்தை தியாகராஜன் குமாரராஜாஇயக்கியுள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி  திருநங்கை தோற்றத்தில் நடித்துள்ளார் .இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை பெற்று உள்ளது.

இந்நிலையில் “சூப்பர் டீலக்ஸ்” படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பி வைத்தது.படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழு உறுப்பினர்கள்  “யூ”மற்றும் “யூஏ” சான்றிதழ் பதிலாக “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

தியாகராஜ குமாரராஜா முன்பு  இயக்கிய ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கும் “ஏ” சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.