#BREAKING: பொன்னியின் செல்வன் விவகாரம்: இயக்குநர் மணிரத்னம் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.!

பொன்னியின் செல்வம் திரைப்படம் தொடர்பாக இயக்குநர் மணிரத்னம் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வம் திரைப்படம் தொடர்பாக இயக்குநர் மணிரத்னம் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ” பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் படமாக வரலாற்றை திரித்து எடுத்துள்ளார். எனவும், பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திர பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

மனுபோர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாகவும்” மனுவில் குறிப்பிட்டுஅவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார்லஸ் அலெக்சாண்டர்வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில்.பொன்னியின்செல்வன்  படத்தைவரலாற்றை திரித்துஉருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கல்கி நாவலைப் படிக்காத மனுதாரர், வரலாற்றைத் திரித்துள்ளதாக எப்படிக் கூற முடியும் என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.