பாகுபலி படத்தில் குழந்தையாக நடித்தவர் இவரா.! வைரலாகும் தற்போதைய புகைப்படம்.!

The current photo of the child who played Mahendra Bhagwati in the film Bhagwati is going very viral on social websites.

பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலியாக நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் தான் பாகுபலி.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. அதிலும் இதில் நடித்த அனைவருக்கும் பாகுபலி திரைப்படம் பெரிய திருப்பு முனையாகவும் ,மார்க்கெட்டையும் தேடி கொடுத்தது.

அந்த வகையில் இந்த படத்தில் சிறு வயதில் மகேந்திர பாகுபலியாக நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . தற்போது 7 வயதாகும் அந்த குட்டி குழந்தை தன்வியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.இப்படத்தின் முதல் போஸ்டரில் கூட தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் ஒரு பெண் குழந்தையை மேலே தூக்கி பிடிப்பது போல் இருப்பதும் , அதிலுள்ள குழந்தை தான் தற்போது வளர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

unknown node