சிறகடிக்க ஆசை சீரியல்..! அடடே..விஜயா மன்னிப்பு கேட்டுவிட்டாரா? இது எப்படி நடந்தது..

siragdikka asai 25

சிறகடிக்க ஆசை இன்று –சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைக்கான[ஜூலை 25] கதைக்களத்தை இங்கே காணலாம்.

ரோகினி ஸ்ருதியிடமும் மீனா விடமும் டெலிவரி எப்படி இருக்கும் என்று சொல்லிட்டு இருக்காங்க. இத கேட்டா ரெண்டு பேருமே ஷாக் ஆகி உங்களுக்கு எப்படிங்க இதெல்லாம் தெரியும்னு கேக்குறாங்க. உடனே ரோகிணி கிளைண்ட்  நிறைய பேர்  சொல்லுவாங்க அப்படின்னு பேச்சை மாற்றி விடுகிறார்கள். இப்ப ஸ்ருதி சொல்றாங்க அய்யய்யோ இதெல்லாம் கேட்டாவே எனக்கு பயமா இருக்கு என்னாலெல்லாம் குழந்தை பெத்துக்க முடியாது அப்படின்னு சொல்றாங்க. இப்ப மீனா சொல்றாங்க என்ன சுருதி இதுக்கே இப்படி சொல்றீங்க எங்க அம்மாவெல்லாம் 3 குழந்தை பெற்று இருக்காங்க எல்லா அம்மாவுமே இப்படித்தான் வலியை தாங்கிட்டு தான் குழந்தை பெத்துருப்பாங்க.

அந்த குழந்தை பொறந்த உடனே நம்ம பட்ட கஷ்டம் எல்லாமே போயிரும்.. ரோகிணி  சொல்றாங்க ரவி குழந்தை வேணும்னு கேட்டா என்ன பண்ணுவீங்க . அதுக்கு மீனா சொல்றாங்க என்னால முடியாது நீ வேணா பெத்துக்கோன்னு சொல்லிடுவேன்னு  சொல்றாங்க.. இப்ப முத்து பாட்டியை வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டு வராரு.. விஜயா வாங்க அத்தை என்ன திடீர்னு வந்துருக்கீங்க . ஏன் நான் வரக்கூடாதா. அப்படி இல்ல அத்தை இப்பதானே வந்துட்டு போனீங்க அதான் கேட்டேன் சொல்றாங்க. நீ  மனோஜ ரொம்ப தலையில தூக்கி வைக்க வேணாம்னு சொன்னேன் கேட்டியா. அண்ணாமலை எங்க அப்படின்னு கேக்குறாங்க அவரு மாடியில இருக்கிறார்னுவிஜயா  சொல்றாங்க.

Nachiyar patti (1)

உடனே பாட்டி அண்ணாமலை கிட்ட என்ன அண்ணாமலை  சின்ன புள்ள மாதிரி ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு பேசாம இருக்கீங்க இதை பார்த்து உன் பிள்ளைங்க நாளைக்கு கத்துக்க போறாங்க நீ வந்து விஜயாவை  மன்னிச்சு அவ கிட்ட பேசணும்னு சொல்றாங்க.. இல்லம்மா அவ திருந்துற மாதிரி எனக்கு தெரியல அதான் நான் அவ கிட்ட பேசுறத நிப்பாட்டிட்டேன். அவளை மீனா கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க அதுக்கப்புறம் நான் பேசுறேன்னு சொல்றாங்க .அதுக்கு பாட்டி சொல்றாங்க இப்ப நீ மீனா கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னா அவளுக்கு மீனா மேல இன்னும் கோவம்  அதிகமாகும் அதனால வேண்டாம் நீ வந்து பேசுன்னு சொல்லவும் அண்ணாமலையும் சரின்னு ஒத்துக்கொள்கிறார்கள்.

இப்ப விஜயாவ மன்னிப்பு கேட்க சொல்றாங்க. அண்ணாமலை சொல்றாரு வீட்ல இருக்க எல்லாரும் முன்னாடியும் கேட்க சொல்லுங்கன்னு சொல்லவும் முத்து எல்லாரையும் கூப்பிடுறாரு.. விஜயா சொல்றாங்க என்ன மன்னிச்சிடுங்க நான் தெரியாம பண்ணிட்டேன் அப்படின்னு சொல்லவும் அண்ணாமலையும் சரின்னு சொல்றாங்க. இதை பார்த்த முத்துவுக்கு ஒரே சந்தோஷம் பாட்டி ஒரு வாரமா தீர்க்க முடியாத பிரச்சனையே ஒரே நிமிஷத்துல தீர்த்திட்டிங்க பாட்டி அப்படின்னு சொல்றாங்க. இப்ப மனோஜ் பாட்டி கூப்பிடுறாங்க.. மனோஜ் சந்தோசமா பாட்டி பக்கத்துல வராரு பாட்டி பளார்னு ஒரு அறையை விடுறாங்க.. என்ன வேலைடா பண்ணி வைத்திருக்கிற அப்படின்னு திட்டுறாங்க.

vijaya (5)

ஏன்  ரோகிணி விஜயா  மாதிரி இவன் பண்ற தப்பு  எல்லாத்துக்கும்  துணை போகாத அப்புறம் உனக்கு தான் பெரிய ஆபத்தா  போய் முடியும் அப்படின்னு சொல்றாங்க. ரோகிணி சரி பாட்டி இனிமேல் அப்படி நடக்காம பாத்துக்கிறேன்னு சொல்றாங்க. இப்ப மனோஜ் பார்த்து இனிமேலாவது நீ பொறுப்பா இருன்னு சொல்றாங்க. இதைக் கேட்ட முத்து இவனுக்கு பொறுப்பு வரணும்னா நான் ஒரு ஐடியா சொல்லவா அப்படின்னு கேக்குறாங்க இவன் கொடுக்க வேண்டிய 29 லட்சத்தை கொடுக்க சொல்லுங்க. உடனே பாட்டி அது எப்படிடா இவனால முடியும்னு கேக்குறாங்க.  கடை வச்சுருக்கான்ல  மாதம் ஐம்பதாயிரம் குடுக்க சொல்லுங்க அப்படின்னு சொல்லவும், ஸ்ருதியும் இது கூட நல்ல ஐடியாவா இருக்கு பாட்டி அப்பதான் அவருக்கு பொறுப்பு வரும்..

உடனே மனோஜ் சொல்றாரு எனக்கே நிறைய கடன் இருக்குது பாட்டி. ரோகினிக்கும் தாலி செயின் இல்லாம மஞ்சள் கயிறு  போட்டுட்டு இருக்கா. இப்ப முத்து.. அது உன் பிரச்சனை ஆனா எனக்கு மாசம் மாசம் கொடுக்கணும்னு   சொல்கிறார். பாட்டியும் என்ன விஜயா இதுக்கு நீதான் பொறுப்பு மாசம் நீ பணத்தை வாங்கி கொடுத்துரு  ,விஜயாவும் சரிங்க அத்தைனு சொல்லிட்டு  டேய் மாச மாசம் அவங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்துவிடுடா அப்படின்னு சொல்லிடறாங்க.. இதோட இன்னைக்கு ஒரு எபிசோடு முடிந்தது . நாளைக்கு மனோஜ் என்ன முடிவெடுத்து இருக்கிறார் என்று பார்க்கலாம்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்