கொரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கிய பிரபல இசையமைப்பாளர்!

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு பாடல்களை பாடி வருகிற நிலையில், நெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2 போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யன், ‘விழித்திரு, தனித்திரு வரும் நலனுக்காக நீ தனித்திரு’ எனற பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.