செல்பி எடுக்க வந்த ரசிகர்..தள்ளிவிட்ட பாதுகாவலர்கள்.. கோபத்தில் ராஷ்மிகா செய்த அந்த செயல்.!

Rashmika Mandanna

விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பேபி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கலந்து கொண்டார். ஹைதராபாத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

RashmikaMandanna
RashmikaMandanna [Image Source : Twitter/@RashmikaTrends]

ராஷ்மிகா மந்தனா மந்தானா வருவதை அறிந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க  அவரை சூழ்ந்தனர். இருப்பினும், ராஷ்மிகாவின் பாதுகாப்புகாக  பாதுகாவலர்கள் சில ரசிகர்களைத் தள்ளிவிட வேண்டிய சூழ்நிலை அங்கு உருவாகியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

அந்த வீடியோவில், ராஷ்மிகா, பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் நிகழ்ச்சிக்கு  நடந்து செல்வதையும், ஒரு ரசிகர் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதையும் காணலாம். ரஷ்மிகா கேமராவைப் பார்த்து சிரித்தபோது, ​​அவரது பாதுகாவலர் அந்த ரசிகரை  பிடித்து தனது பாதையில் இருந்து தள்ளிவிட்டார்கள்.

Rashmika Mandanna
Rashmika Mandanna [Image Source : Twitter/@Naveen983756623]

இதனை பார்த்த ராஷ்மிகா சற்று கோபம் ஆகி தள்ளி விடாதீர்கள் என்பது போல செய்கையை கொடுத்துவிட்டு உடனே ரசிகரை பார்த்து ஐயோ…’கவனமாக இருங்கள்’ என்றார் . பின்னர், மற்றொரு ரசிகை பெண் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனை கவனித்த  ராஷ்மிகா அவரிடம்  போட்டோ எடுக்கும்போது, ‘ஃபாஸ்ட், ஃபாஸ்ட், ஃபாஸ்ட்’ என கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை ராஷ்மிகா புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்