சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். டாக்டர் படம் மார்ச் மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அயலான் படத்தினை ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்தி கேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து டி.முத்துராஜ் இசையமைக்கிறார் . பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் 2500 கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து இன்று சிவகார்த்திகேயன் பிறந்த நாளிற்கு படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node