படம் பிளாப்...சம்பளமே வேண்டாம்...'வாத்தி' நடிகை செய்த வியப்பான செயல்.!

மலையாள திரையுலகில் பல பெரிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்த சம்யுக்தா மேனன் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான

மலையாள திரையுலகில் பல பெரிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்த சம்யுக்தா மேனன் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

unknown node

samyuktha menon vaathi [Image Source : Google ]

படத்தில் நடித்த சம்யுக்தா மேனன் நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகை சம்யுக்தா மேனன் தான் ஒரு படத்தில் நடித்த படம் வெளியாகி தோல்வி அடைந்துள்ளதால், அந்த படத்தில் நடித்தற்காக சம்பளமே வாங்கவில்லையாம். இந்த தகவல் தற்போது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

unknown node

Samyuktha Menon new [Image Source : Google ]

அதன்படி, சம்யுக்தா மேனன் மலையாளத்தில் ‘எடக்காடு பட்டாலியன்’  என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தோல்வி அடைந்தது. எனவே படம் தோல்வியால், படத்திற்காக சம்யுக்தா பாதி சம்பளம் மட்டும் வாங்கிய நிலையில், மீதி தொகையை தயாரிப்பாளர் கொடுத்தபோது, அதனை வாங்க மறுத்துள்ளாராம்.

unknown node

Samyuktha Menon [Image Source : Google ]

இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள்  சம்யுக்தா மேனனை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். மேலும் வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் மலையாளத்தில் பூமராங் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.