படம் ரொம்ப சூப்பர்...‘விடுதலை'பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்.!

‘விடுதலை' படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

‘விடுதலை’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில்  கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

unknown node

Viduthalai bo [Image Source : Twitter]

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 1 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

unknown node

rajinikanth [Image ource Google]

படத்தை பார்த்த மக்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுதலை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன், சூரி ஆகியோரை நேரில் அழைத்து படம் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node