விவாகரத்தை தொடர்ந்து பிரபல நடிகரை மறுமணம் செய்யும் சின்னத்திரை நாயகி.!

மேக்னா வின்சென்ட்,  மலையாள சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள்

மேக்னா வின்சென்ட்,  மலையாள சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிரபல சீரியல் நடிகையான மேக்னா வின்சென்ட்,  மலையாள சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதே தொடர் சந்தனமழை என்ற பெயரில் உருவாக்கப்பட்டு அதிலும் இவரே நடித்திருந்தார். இந்த சீரியல் இந்தியில் ஒளிப்பரப்ப பட்ட சாத் நிபானா சாதியா என்ற தொடரின் ரீமேக்காகும். அந்த தொடரின் மூலம் பிரபலமான மேக்னா அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள் தொடரில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். அதனையடுத்து பிரபு சாலமனின் கயல் படத்திலும் நடித்தார் மேக்னா வின்சென்ட். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டோமி டான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டோமி டான் சீரியல் நடிகையான டிம்பிள் ரோஸின் சகோதரர் ஆவர்.

இந்த நிலையில் டான் டோமிக்கும், மேக்னா வின்சென்ட்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து இருவரும் விவாகரத்து கோரி கோர்டில் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது எர்ணாகுளத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உள்ளது மேலும் டான் டோமி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், விரைவில் திருமணம் இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் மேக்னா வின்சென்ட் அவர்களும் தன்னுடன் பொன்மகள் வந்தாள் தொடரில் நடித்த விக்கி என்ற நடிகரை மறுமணம் செய்யவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தொடரின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், அதனால் தான் கணவருக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல் வதந்தியா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.