மாஸ்டர் படத்தின் புதிய சாதனை...?

The teaser of the master movie starring actor thalapathy Vijay has set a new record on the YouTube website

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூடியூப் இணையத்தளத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த படம் திரையரங்குகளில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் .மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது .மேலும் கடந்த தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி இந்திய அளவில் பல சாதனைகளை படைத்தது கொண்டு வருகிறது .

அந்த வகையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூடியூபில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஆம், இந்திய சினிமாவில் யூடியூப் இணையத்தளத்தில் அதிகம் கமெண்ட் செய்த முதல் டீசரை என்ற சாதனையை மாஸ்டர் படம் படைத்துள்ளது இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் .