என்னை பற்றி வெளியான செய்தி முற்றிலும் வதந்தி – ஷகிலா..!

ஷகிலா இறந்து விட்டதாக வதந்தி செய்திகள் பரவி வந்த நிலையில், இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளிட்டுள்ளார்.

ஷகிலா இறந்து விட்டதாக வதந்தி செய்திகள் பரவி வந்த நிலையில், இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் அழகிய தமிழ் மகன், பாஸ் என்ற பாஸ்கரன், மாஞ்சா வேலு, ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஷகிலா. இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 – வில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் மட்டுமில்லாம, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளும் சில திரைப்படைகள் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஷகிலா இறந்து விட்டதாக வதந்தி செய்திகள் பரவி வந்த நிலையில், இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளிட்டுள்ளார். வீடியோவில் ஷகிலா கூறியிருப்பது ” நான் இறந்துவிட்டதாக பரவிய தகவல் வதந்தி. நான் தற்போது நலமாக இருக்கிறேன். எனக்கு பலர் போன் செய்து விசாரித்தனர். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னை பற்றி தவறாக செய்தியை பரப்பியவருக்கு நன்றி. அதனால் தான் என்னை அனைவரும் கவனித்துள்ளீர்கள்” என்று கூறியுள்ளார்.

unknown node