25 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கண்டா வரச்சொல்லுங்க பாடல்..!!

The song Kanda Varachcollunga from the movie Karnan has crossed 25 million views on YouTube

கர்ணன் படத்திலிருந்து வெளியான கண்டா வரச்சொல்லுங்க பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்ளை கடந்துள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டீசர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் கண்டா வரச்சொல்லுங்க பாடல் தற்போது யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்ளை கடந்துள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.