28ம் தேதி நள்ளிரவு 12.01க்கு வெளியாகிறது கேப்டன் மில்லர் படத்தின் டீசர்!

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் அறிவிப்பு.

Captain Miller Teaser

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் அறிவிப்பு.

தனுஷின் நடிப்பில் வெளிவரிருக்கும் பீரியட் ஆக்ஷன் படமான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் மிகப்பெரிய ஹைப்பைக் கொண்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், நடிகர் தனுஷின்பிறந்த நாளை முன்னிட்டு, ஜூலை 28ம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு  டீசர் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

unknown node

Captain Miller Teaser [File Image]

டீசர் அறிவிப்பு போஸ்டரில் நடிகர் தனுஷ் மிகவும் ஆக்ரோஷத்துடன் கையில் மிஷின் துப்பாக்கியுடன் இருக்கிறார். அண்மையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தென்காசி மாவட்டத்தின் வனப்பகுதியில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தரமாக வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

CaptainMillerFirstLook [File Image]

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில், ஷிவ் ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் மற்றும் ஆர்ஆர்ஆர் புகழ் எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.