கர்ணன் படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

The teaser of Karnan movie will be released on the 13th.

கர்ணன் படத்தின் டீசர் வருகின்ற 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.

நடிகர் தனுஷ் நடித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

சமீபத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஏப்ரல் 9-ம் திரையரங்குகளில் கர்ணன் திரைப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.மேலும் கர்ணன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.பாடல்களை கண்ட ரசிகர்களைடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.எனவே படத்தினை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் .இந்த நிலையில் கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களிற்கு முன்பு தனுஷ் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனுஷின் கர்ணன் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் தனுஷின் கர்ணன் பட டீசரை மார்ச் 13 தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.