என்னது தளபதி 68 கதை சிம்புவுக்கு எழுதப்பட்டதா? இது ரொம்ப புதுசா இருக்கு!

thalapathy 68 first choice str

சிம்புவை வைத்து மாநாடு என்கிற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து அவருடைய 68-வது படமான ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். படத்தில் லைலா, ஸ்னேகா, பிரசாந்த், பிரபுதேவா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதை இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்க்காக எழுதவில்லையாம். முதன் முதலாக சிம்புவுக்கு தான் இந்த திரைப்படத்தின் கதையை எழுதினாராம். கொரோனா காலகட்டத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தின் கதையை கூறினாராம். அந்த கதைனுடைய ஒன்லைனை கூறினாராம்.

ஆனால், இது இருக்கட்டும் என்பது போல சிம்பு கூறிவிட்டாராம்.  அதன் பிறகு இந்த படம் எடுக்கப்படவேண்டி இருந்த சூழலில் படத்திற்கான செலவுகளை தயாரிப்பாளர் செலவு செய்ய தொடங்கிவிட்டாராம். பிறகு சிம்பு ஒரு ஐடியா சொன்னாராம். அது என்னவென்றால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு கதை ரெடி செய்து அவருக்கு ஒரு படம் செய்து கொடுக்கலாம் என கூறியிருந்தாராம்.

ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுதிருப்பேன்! ராதா ரவி வீடியோவை வெளியிட்ட சின்மயி!

அதன்பிறகு தான் மாநாடு படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்தாராம். சுரேஷ் காமாட்சியும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை கண்டிப்பாக மாநாடு படத்தை எடுத்தே ஆகவேண்டும் என கூறிவிட்டாராம். பிறகு மாநாடு படத்தையும் திட்டமிட்டபடி எடுக்கப்பட்டு படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து விட்டது.

பிறகு வெங்கட் பிரபு சிம்புவிற்காக எழுதி இருந்த அந்த கதையை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பிறகு கதை குள் இறங்கி அதனை விஜய்க்கு ஏற்றபடி மாற்ற தொடங்கினாராம். மாற்ற தொடங்கி முழுவதுமாக விஜய்க்கு எப்படி செட் ஆகுமோ அதே அளவிற்கு முழுவதுமாக மாற்றி கதையை விஜயிடம் கூறினாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.  மேலும், தளபதி 68 படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் அங்கு சமீபத்தில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
India whitewash Bangladesh
NZWvsSLW
Kavarapettai Train accident
Mohammad Shami
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole
Rishabh Pant