கர்ணன் படத்தின் டீசரை பார்த்த இயக்குனர் சுப்பிரமணிய சிவா தனது ட்வீட்டர் பக்கத்தில் புகழந்து கூறியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நாளை இரவு 7.01 மணிக்கு படத்திற்கான டீசர் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தற்போது அந்த டீசரை பார்த்த பிரபல இயக்குனரான சுப்பிரமணிய சிவா தனது ட்வீட்டர் பக்கத்தில் ”எச்சரிக்கையாகவே இருங்கள். இன்றும் சொல்கிறேன் இன்று மாலை 7:01 நடக்க போவது. வேற லெவல் சம்பவம் இல்ல இதுக்கு இனிமே தான் பேரே வைக்கனும் கொண்டாட காத்திருக்கும் அனைத்து ஐய்ட்டம் காரர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.
unknown node