எனது இரண்டாவது மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும்.! கண்டிஷன் போடும் டி.இமான்.!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இந்த படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர்

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இந்த படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, மைனா, கும்கி, கயல் உள்ளிடட படங்களில் இசையமைத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.

unknown node

தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக இமான் அறிவித்திருந்தார்.

unknown node

இந்த நிலையில், இமானின் விவாகரத்து அறிவிப்பை அடுத்து அவரது பெற்றோர்கள் இமானுக்கு பெண் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதையடுத்து சமீபத்தில் தனது மறுமணம் குறித்து பேசிய இமான். தான் மறுமணம் செய்து கொள்ளும் பெண் கட்டாயம் விதவை அல்லது விவாகரத்து பெற்ற பெண்ணாக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்காவது தாயாக இருக்கவேண்டும் என்றும், தனது குழந்தைகளுக்கு அம்மா இடத்தை நிரப்ப வேண்டும்” என கூறியுள்ளார்.