இந்த வாரம் மிஷ்கின்...அடுத்த வாரம் கமல்..? 'லியோ' திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் “லியோ”. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் “லியோ”. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.

unknown node

leo [Image Source : Twitter]

மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

LEO Mysskin [Image Source : Google ]

நேற்று இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த மிஷ்கினுடைய காட்சிகள் அனைத்தும் படமாக்கபட்டு முடிக்கப்பட்டதாக மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து இந்த வாரம் லியோ படத்தில் கமல்ஹாசன் காட்சிகளை படக்குழு படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், படத்தில் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

unknown node

Kamal Haasan [Image Source: Twitter ]

இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தி தகவலா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில், தற்போது அது வதந்தி தகவல் என்று நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். எனவே, அவர் லியோ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் சினிமா வட்டாரத்துக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.

unknown node

SanjayDutt getting ready for Leo [Image Source : Google ]

மேலும், லியோ படக்குழு இந்த வாரம் சஞ்சய் தத் உடைய காட்சிகளை படமாக்கவுள்ளது. படத்திற்காக அவர் கடுமையான உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் கூட இணையத்தில் மிகவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.