ரசிகர்களை மீண்டும் காதல் அலையில் மூழ்கடிக்க வரும் காவியம்...'டைட்டானிக்' ரீ- ரிலீஸ் தேதி இதோ...!

காதல் படம் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது கடந்த 1997-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான "டைட்டானிக்" படம் தான். இந்த படத்தில் வரும் காதல்

காதல் படம் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது கடந்த 1997-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான “டைட்டானிக்” படம் தான். இந்த படத்தில் வரும் காதல் காட்சிகள் அனைத்தும் அவ்வளவு எமோஷனலாக இருக்கும். படத்தை பார்த்து கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

unknown node

Good news Titanic fan [Image Source : Twitter ]

இந்த படத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட்  உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த காதல் திரைப்படம் பல இளைஞர்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது.

unknown node

Titanic [Image Source : Twitter ]

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைடைந்து. மேலும் ஆஸ்கர் விருதுக்கு, 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, 11 விருதுகளை வாங்கி  திரைஉலகையே மிரள வைத்தது என்றே கூறலாம். இதுவரை எந்த படமுமும் இதை போல ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதே இல்லை.

unknown node

Titanic [Image Source : Twitter ]

இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் வகையில், டைட்டானிக் படக்குழு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளனர். அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி (10.02.2023) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை 4k வெர்ஷனிலும் 3டியிலும் வெளியாக உள்ளதாகவும் படத்தின் புதிய ட்ரைலரையும்வெயிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.