இந்தாண்டு தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த 'டாப் 3' படங்கள்.!

இந்த வருடம் ஜனவரி தொடங்கி பிப்ரவரி மாதம் முடியப்போகும் நிலையில், தமிழ் சினிமாவில் இந்த இரண்டு மாதத்தில் பல படங்கள் வெளியாகி சில படங்கள் விமர்சன ரீதியாகவும்,

இந்த வருடம் ஜனவரி தொடங்கி பிப்ரவரி மாதம் முடியப்போகும் நிலையில், தமிழ் சினிமாவில் இந்த இரண்டு மாதத்தில் பல படங்கள் வெளியாகி சில படங்கள் விமர்சன ரீதியாகவும், சில திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றிநடைபோட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் அதிகம் வசூல் செய்த டாப் 3 படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 3 படங்கள்

1.துணிவு

2.வாரிசு

3. வாத்தி

துணிவு

unknown node

Thunivu [Image Source : Twitter ]

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 24 கோடி வரை வசூல் செய்து இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

வாரிசு

unknown node

VarisuPongal [Image Source: Twitter ]

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது உலகம் முழுவதும் மொத்தமாக 300 கோடி வசூல் செய்திருந்தது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 22 கோடி வரை வசூல் செய்து இந்த ஆண்டு வெளியான படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

வாத்தி

unknown node

Vaathi box offfice [Image Source : Google ]

தெலுங்கு இயக்குனர் வெங்கி  இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியான திரைப்படம் “வாத்தி”. இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது . இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 13 கோடி வரவு வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.