முதல் முறையிலேயே வெற்றிகரமாக டோலிவுட்டில் அறிமுகமான கோலிவுட் ஹீரோக்கள்.!

முன்பெல்லாம், தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம். ஆனால், இப்பொது தமிழ் நடிகர்களின் படங்கள் ஓரே நேரத்தில் தெலுங்கு,

முன்பெல்லாம், தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம். ஆனால், இப்பொது தமிழ் நடிகர்களின் படங்கள் ஓரே நேரத்தில் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் வெளியாகி தங்கள் வெற்றியை ருசித்து வருகிறார்கள்.

unknown node

Top Kollywood Heroes Debut in Tollywood [Image Source : Google ]

அதிலும் குறிப்பாக தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமா தமிழ் பிரபலங்களுக்கு ஆதரவாக உள்ளது. கடந்த காலங்களில் பல தமிழ் நடிகர்கள் தெலுங்கில் அறிமுகமாகி வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில், தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமாக அறிமுகமான ஐந்து தமிழ் ஹீரோக்கள் பற்றிய பார்க்கலாம்.

ரஜினிகாந்த் (சிலகம்மா செப்பிண்டி)

தமிழ்த் திரையுலகில் வில்லனாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘சிலகம்மா செப்பிண்டி’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். மேலும், இந்த படம் அவருக்கு பக்கபலமாக அமைந்தது.

unknown node

Chilakamma Cheppindi [Image Source : Google ]

இயக்குனர் எரங்கி ஷர்மா இயக்கிய இப்படம் 1969 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ‘அடிமகள்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். மேலும் இது ரஜினிகாந்திற்கு தெலுங்கில் பிரமாண்டமாக அறிமுகமாகும் படம். சிலகம்மா செப்பிண்டி’ சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதை பெற்றது, அது மட்டும் இல்லங்க… இப்படம் 1978 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும்  திரையிடப்பட்டது.

கமல்ஹாசன் (மரோசரித்ரா)

குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தை தொடங்கிய உலக நாயகன் கமல்ஹாசன், தனது அற்புதமான அவதாரத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக தன்னை வளர்த்துக் கொண்டார்.இவர், 1978 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய ‘மரோ சரித்ரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

unknown node

Maro Charitra [Image Source : Google ]

ஒரு தமிழ் பையனுக்கும் தெலுங்கு பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் கதை பற்றி விவரிக்கும் இந்த படம், கமல்ஹாசனுக்கு தெலுங்கில் ஒரு வெற்றிகரமான அறிமுகமாக அமைந்தது. இந்தப் படம் பின்னர், இந்தியில் ‘ஏக் துயூஜே கே லியே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது, இந்தியிலும் கமல்ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சூர்யா  (ரக்த சரித்ரா 2)

தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகர் சூர்யா, இந்தி-தெலுங்கு என இருமொழிகளில் உருவான ‘ரக்த சரித்ரா 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு, தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார்.

unknown node

Rakhta Charitra 2 [Image Source : Google ]

என்னதான் இருமொழிகளில் இப்படம் வெளியானாலும், . சூர்யா ஒரு அற்புதமான நடிப்பை வழங்கி தெலுங்கு ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தார். மேலும் இது தெலுங்கு சினிமாவில் அவரது திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அரசியல் ஆக்‌ஷன் திரில்லர் படமான ரக்த சரித்ரா 2 படம் 2010ல் வெளியானது. மேலும், இப்படம் தமிழில் ‘ரத்தசரித்திரம்’ என்ற பெயரில் டப்  செய்யப்பட்டது.

விஜய் சேதுபதி (சைரா நரசிம்ம ரெட்டி)

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற சினிமாவிலும் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

unknown node

SyeRaa Narasimha Reddy – Vijay Sethupathi [Image Source : Google ]

அந்த வகையில், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி முக்கிய வேடத்தில் நடித்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற அதிரடி ஆக்சன் படத்தில் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் துணை வேடத்தில் நடித்தாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்தார், மேலும், இந்த படத்தினை தொடர்ந்து, அவருக்கு தெலுங்கில் மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

விஜய் (வாரிசு)

இயக்குனர் வம்சி இயக்கத்தில் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகி வசூலில் சக்க போடு போட்டு, இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

unknown node

Varisu [Image Source : Twitter ]

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 310 கோடிகள் வசூலை கடந்து விஜயின் சினிமா கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. தமிழ் வாரிசு என்றும் தெலுங்கில் வரசுடு என்ற தலைப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது.

தனுஷ் (வாத்தி/சார்)

தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘சார்’ என்ற தலைப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இந்த படத்தில் நடித்து தனுஷ் மிக்பெரிய வெற்றியை ருசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 17 அன்று பெரிய வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

unknown node

Vaathi box offfice [Image Source : Google ]

கல்வி சார்ந்த சமூக கருத்தை விவரிக்கும் இந்த திரைப்படம், வெறும் மூன்று நாட்களில் ரூ.51 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதிலும், தெலுங்கு சினிமாவில் நல்ல வசூல் ஈட்டியுள்ளதாகவும், இது தெலுங்கில் தனுஷுக்கு ஒரு நல்ல வெற்றிகரமான படம் என்று கூறப்படுகிறது.