நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது.
unknown nodeVaathi Blockbuster [Image Source : Google ]
தமிழில் “வாத்தி” என்ற பெயரிலும், தெலுங்கில் “சார்” என்ற பெயரிலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கல்வியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் பலருக்கும் படம் பிடித்துள்ளது. எனவே படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் திரையங்கிற்கு செல்கிறார்கள்.
unknown nodeVaathi bo [Image Source : Google ]
தமிழை விட தெலுங்கில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றே கூறலாம். இந்த நிலையில், படம் வெளியான 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
unknown nodeVaathi 75 crores gross world wide [Image Source : Google ]
இப்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தனுஷின் கடந்த கால படமான ரூ.100 கோடி வசூல் செய்த படங்களுடன் வாத்தி திரைப்படம் இணையும் நேரம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதன்படி, இன்று ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.100 கோடி அடித்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
unknown node