தலைவர் ரீ என்ட்ரி.... மீண்டும் சூர்யாவுடன் இணையும் வடிவேலு..?

It has been reported that actor Vadivelu will play the lead role in Surya's 40th film.

சூர்யாவின் 40 வது படத்தில் நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் காமெடி மன்னனாக கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு .சில காலமாக எந்த படத்திலும் நடிக்காத இவரை சினிமாவில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் வடிவேலு மீண்டும் படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, ஆம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 40 வது படத்தில் நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.