1 வருடத்திற்கும் மேல் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த வலிமை அப்டேட்..!

It has been reported that the first look poster for the upcoming movie valimai starring Ajith will be released in March.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மார்ச் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழுவினர் தரவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்துடன் வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தல அஜித்தின் வலிமை படம் குறித்த அப்டேட்டை பேட்டி ஒன்றில் போனி கபூர் தெரிவித்துள்ளார். ஆம், “வலிமை படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் ,ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து தல ரசிகர்கள் ஒரு வருடமாக காத்திருந்த வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மார்ச் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது இதனை அஜித் ரசிகர்கள் ட்வீட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.