ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணக்கம்டா மாப்ள படத்தின் ஃ பர்ஸ்ட் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் வணக்கம் டா மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகையான அம்ருதா ஐயர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் டேனியல் , பிக்பாஸ் ரேஷ்மா பசுபதி , ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் படத்திற்கான படப்பிடிப்பினை படக்குழுவினர் தொடங்கினர். தற்போது மிகவும் மும்மரமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான ஃ பர்ஸ்ட் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஃ பர்ஸ்ட் போஸ்டர் ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
unknown node