நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வாரிசு ‘. இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
unknown nodeVarisuPongalWinner [Image Source : Twitter ]
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரபு, ராஷ்மிகா, ஷாம்,சரத்குமார், உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றஇந்த திரைப்படம் வெளியாகி 30-நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
unknown nodeVijay Varisu Movie [Image Source : Google]
அதைப்போல வசூலிலும் படம் உலகம் முழுவதும் 310 கோடிகள் வசூல் செய்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாறியுள்ளது. மேலும், விஜய் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான படங்களை விட வாரிசு தான் அதிகமான வசூல் செய்த படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.
unknown nodebigil varisu [Image Source: Twitter ]
இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 305 கோடி வசூல் செய்து முதல் இடத்தில இருந்தது. அதனை வாரிசு திரைப்படம் 310 கோடிகள் வசூல் செய்து முதல் இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. மேலும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.