வாரிசு Vs துணிவு : 3-ம் நாளில் வசூல் எவ்வளவு தெரியுமா..?

இந்த ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடத்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி

இந்த ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடத்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படமும் பெரிய படங்கள் என்பதால், இரண்டு படத்தையும் விஜய்-அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.

unknown node

Thunivu vs Varisu Box Office [Image Source : Google]

விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் இரண்டு படத்திற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இரண்டு திரைப்படங்களும் வெளியான 3 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்களேன்-மிரட்ட வருகிறது “புதுப்பேட்டை 2”.! செல்வராகவன் கம்பேக் லோடிங்…

unknown node

Thunivu Box Office [Image Source : Twitter ]

அதன்படி, அஜித் “துணிவு” திரைப்படம் வெளியான 3 நாளில் தமிழகத்தில் மட்டும் 43 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.  இதைப்போல விஜயின் “வாரிசு”  திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 40 கோடியும் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

unknown node

VarisuPongalWinner [Image Source : Twitter ]

இந்த தகவலைவிஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கூறி வருகிறார்கள். இதன் மூலம் வாரிசு படத்தை விட துணிவு திரைப்படம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் துணிவு படத்தை விட வாரிசு திரைப்படம் அதிகம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.